வளைகுடாவிலிருந்து இந்தியாவுக்கு செல்பவர்கள் 7500 ரூபாய்க்கு மேல் எடுத்து செல்ல கூடாது............!!

வளைகுடாவில் பணி புரியும் இந்தியர்கள் விடுமுறைக்கு இந்தியா செல்லும் போது அதிக அளவு பணம் எடுத்து செல்ல வேண்டாம் என்று வளைகுடாவில் உள்ள இந்திய தூதகரங்கள் அறிவுறுத்தியுள்ளன.

ஓமனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவுக்கு செல்லும் வளைகுடா வாழ் இந்தியர்கள் அதிக அளவு பணம் எடுத்து செல்வதால் சில சமயம் இந்திய விமான நிலையங்களில் பிரச்னை ஏற்படுகிறது என்றும் இதை தவிர்க்க அதிக பணம் எடுத்து செல்ல கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அவ்வறிக்கையின் படி இந்திய குடிமக்கள் மாத்திரம் இந்தியாவுக்கு செல்லும் போதோ அல்லது இந்தியாவிலிருந்து திரும்பும் போதோ அதிகபட்சம் 7,500 ரூபாய்கள் எடுத்து செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களான NRIக்கள் சட்டப்படி இந்திய பணத்தை எடுத்து செல்ல கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்தியாவுக்கு செல்பவர்கள் அதிகபட்சம் 5,000 அமெரிக்க டாலர்களுக்கு இணையான அந்நிய செலவாணி (ஓமன் ரியால், அமீரக திர்ஹம், சவூதி ரியால், குவைத் திர்ஹம்) எடுத்து செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் செக், டிராப்ட் என எல்லாம் சேர்த்து அதிக பட்சம் 10,000 அமெரிக்க டாலர்களுக்கு இணையான வெளிநாட்டு கரன்சியை எடுத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மட்டன் பிரியாணி

அறுசுவை.காம்


 • அரிசி - ஒரு கிலோ

 • மட்டன் - ஒரு கிலோ

 • வெங்காயம் - பெரியது 4

 • தக்காளி - பெரியது 3

 • பச்சைமிளகாய் - 5

 • இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி

 • மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி

 • மிளகுதூள் - 1 1/2 தேக்கரண்டி

 • சீரகதூள் - 1 1/2 தேக்கரண்டி

 • மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி

 • சோம்புதூள் - ஒரு தேக்கரண்டி

 • பிரியாணிமசாலா - 2 தேக்கரண்டி

 • தக்காளிசாஸ் - ஒரு தேக்கரண்டி

 • பட்டை - 2

 • கிராம்பு - 6

 • ஏலக்காய் - 4

 • புதினா - 5 கொத்து

 • மல்லிகீரை - 5 கொத்து

 • எண்ணெய் - 100 மில்லி

 • தயிர் - அரை கப்

 • பன்னீர், ரோஸ்வாட்டர் - ஒரு தேக்கரண்டி

 • எலுமிச்சை - ஒன்று

 • வினிகர் - ஒரு தேக்கரண்டி

 • உப்பு - தேவையான அளவுவெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். மல்லி புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கறியை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிகட்டி குக்கரில் போட்டு அதில் வினிகர், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக விடவும்.
அரிசியை கழுவி விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி தண்ணீரை வடித்து விட்டு அரிசியை அதில் போட்டு லேசாக வறுத்துக் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
மிளகாய் தூள், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் தூள் வகைகள், தயிர், தக்காளி சாஸ், உப்பு, பன்னீர், எலுமிச்சைச் சாறு, மட்டன் வேக வைத்த தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
அதனுடன் வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரியும் வரை மூடி வைக்கவும்.
எண்ணெய் பிரிய தொடங்கியதும் அதில் ஒன்றிற்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் அதில் வறுத்து வைத்திருக்கும் அரிசியை போட்டு ஒரு கொதி வந்ததும். மூடி போட்டு, மேலே கனமான பொருளை வைத்து அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் தம்மில் வைக்கவும். மல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான மட்டன் பிரியாணி ரெடி.

தங்கம் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவும் - அதிர்ச்சி தகவல்...............!!


நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது,

வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்,

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம், இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்,

நண்பரின் ஆதங்கம் இதுதான். சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை...?? என்பதே அவரது நியாயமான கேள்வி

அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும், 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள், இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் ஒன்பதாயிரம் ரூபாய் தெண்டம் அழ வேண்டும், ஏறக்குறைய 16 சதவீதம் ? எதற்காக இந்த தெண்டம் ? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும் ? எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை, அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள், போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை கூல் பண்ணுவார்கள், இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள் அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...

சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...

உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும், என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா ? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும் ? செய்கூலி கேட்பது நியாயம்தான் 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும் ? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை ? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை ?

எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள் ? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது ? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான் ? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான் ? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில், கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது,

இது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...அல்லது திருத்தப்பட வேண்டும். விரைவில்

இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...அதுவும் உங்களால் தான் முடியும்............!!

ஒரு கப் காபியில் கைபேசியை சார்ஜ் செய்யலாம்


இன்றைய தொழில்நுட்ப உலகில் வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான சாதனங்களை உருவாக்கி வருகிறது.அந்த வகையில்

அமெரிக்க நிறுவனம் ஒன்று புதிய சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் உங்களுடைய கைபேசியை சுட சுட காபியோ அல்லது குளு குளு பீரோ இருந்தாலே போதும் தேவையான சார்ஜை செய்துகொள்ளலாம்.

படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

எபிபானி ஒன் puck என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், சூடான பானம் அல்லது குளிர்ந்த பானங்களிலிருந்து கைபேசிக்கு தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது.

இந்த புதிய சாதனத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. நீல வண்ணத்திலுள்ள பக்கத்தில் குளிந்த பானத்தை தான் வைக்கவேண்டும். மேலும் சிவப்பு நிறமுடைய பக்கத்தில் சூடான பானங்களை வைத்தாலே செல்போனானது சார்ஜ் செய்யப்படும்.

1816ல் உருவாக்கப்பட்ட ஸ்டீம் என்ஜின் என்ற முறையின் தொழில்நுட்ப தாக்கமே இந்த புதிய சார்ஜருக்கான அடித்தளம் என்கிறது எபிபானி லேப்ஸ் என்ற நிறுவனம். இந்நிறுவனம் தான் இந்த புதிய சாதனத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks To:
- தினக்குரல்

2002 ஜூன் முதல் எரிபொருள் (பெட்ரோல் & டீஸல்) விலையை குறிப்பிடும் வரைபடம்.

 Historical Fuel Price chart India 

CLICK HERE

 

We have collected historical fuel prices in India since the year 2002. We cover all the metro cities in India and have created a graph for each city - Delhi fuel price hike chart, kolkata fuel price hike chart, Mumbai fuel price hike chart and Chennai fuel price hike chart. We hope that the graphs privide an insight on the fuel price increase.
We are trying to include fuel prices in more cities. If you have information on historical fuel prices in your City, plese feel free to drop a mail to mypetrolprice@mypetrolprice.com.

காரைக்கால் பள்ளி மாணவன் வடிவமைத்துள்ள சூரிய ஒளி மருந்து தெளிப்பான்


காரைக்கால் பள்ளி மாணவன் வடிவமைத்துள்ள சூரிய ஒளி மருந்து தெளிப்பான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது...

மனித சக்தி, பெட்ரோல் சக்தி கொண்டு இயங்கும் ஸ்பிரேயர்களுகு மாற்றாக சூரிய ஒளியில் இயங்கும் பூச்சி மருந்து தெளிபானை உருவாக்கிய காரைக்காலை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் முகேஷ் நாராயணன் வடிவமைத்துள்ளார்...

நம் வாழ்த்துக்களை முகேஷ் நாராயணனுக்கு பகிர்வோம்...!

நன்றி : Sinu Vasan.


நன்றி :

"சாதனையாளர்கள்"


காது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்...
காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் படிப்பின் இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்கள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர் கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.

ஹெட்போன் போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் மோட்டாரில்தான் இருக்கிறது சங்கதி. ஹெட்போனை மொபைலுடன் இணைத்துப் பேசும்போது மோட்டாரின் அதிர்வினைப் பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின் பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன் செயல்பாடு.

"பொதுவாகவே மூக்கு, தொண்டை, காது போன்றவை ஒரே நரம்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமான பல் இதற்கு உதவி செய்கிறது. ஹெட்போனில் இருக்கும் நீண்ட குச்சி போன்ற அமைப்பு பேசும்போது, தொடர்ந்து பல்லில் பட்டு அதிர்வினை ஏற்படுத்தி காது கேட்பவர்கள் கேட்க உதவி செய்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் பேசுவதைக் கேட்பதோடல் லாமல் பாடலையும் கேட்க முடியும்" என்று சிவனேஷ் தங்கள் கருவியின் செயல்பாட்டைப் பற்றி சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும் கருவியைக் கண்டுபிடிக்கவே 2,500 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

பேட்டரி மூலம் இயங்கும் இந்தக் கருவியை எந்த செல்போனோடு வேண்டுமானாலும் இணைத்துப் பயன்படுத்த முடியும். தற்பொழுது பேடண்ட் வாங்க முயற்சித்து வருகிறார்கள். அது கிடைத்து, தொழிற் சாலையில் தயாரிக்கத் துவங்கி விட்டால் குறைவான விலைக்கே வழங்க முடியும் என்கிறார்கள்.

இவர்களின் செயலை பாராட்டுவோம்...!


Thanks To:

ரிலாக்ஸ் ப்ளீஸ் 

windows 7 மற்றும் 8 OS .தமிழில் பயன்படுத்த ....

 
தமிழர்களே......
windows 7 மற்றும் 8 OS .தமிழில் பயன்படுத்த வழி செய்து இருக்கிறது .
ஆங்கிலத்தில் மட்டுமே பார்த்தே கணினியே இனி நம் அழகு தமிழில் பார்க்கமுடியும் .

கணினி கற்று கொள்ள ஆங்கிலமும் அவசியம் இல்லை அவர் அவர் தாய் மொழியிலே கணினி இணையத்தை கற்று கொள்ளலாம் .எத்தனை மொழி வேண்டுமாயின் கற்று கொள்ளுங்கள் தாய் மொழியே மட்டும் மறவாதீர்கள் .

எத்தனை மொழி கற்று இருந்தாலும் சிந்தனை பிறப்பது தாய் மொழியில் மட்டும் தான்

அதுபோல் vlc player,firefox ,internet explorer இவற்றிலும் தமிழ் முழுமையாக பயன் படுத்த முடியும் .

விண்டோஸில் தமிழ் திரை மாற்ற .கீழே இருக்கும் இணைப்பிற்கு போய் தமிழ் மென்பொருள் தரவிறக்க வேண்டும் //http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta

புரியவில்லை என்றால் தமிழுக்கு விண்டோசை எப்படி மாற்றுவது என்று இந்த விடியோவை பார்க்கவும் http://www.youtube.com/watch?v=ib2bQ2BlGjI

தொழில்நுட்ப உதவி வேண்டுமாயின் கேளுங்கள் சொல்லுகிறேன் . 

Thanks to:

உங்கள் மொபைல் தொலைந்தால்.......

உங்கள் மொபைல் தொலைந்தால் போலிஸ் உதவியின்றியே உங்கள் மொபைல் இருக்கும் இடத்தை பற்றி அறியலாம். வியப்பாக இருக்கிறதா? வாருங்கள் அதுபற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

Got an interesting fact to share.. Nowadays each one of us carries Hi Fi Mobile devices and always fears that it may be stolen.
Each mobile carries a unique IMEI i.e. International Mobile Identity number which can be used to track your mobile anywhere in the world.

This is how it works!!!!!!

1. Dial *#06# from your mobile.

2. Your mobile shows a unique 15 digit .

3. Note down this no anywhere but except your mobile as this is the no which will help trace your mobile in case of a theft.

4. Once stolen you just have to mail this 15 digit IMEI no. to cop@vsnl.net

5. No need to go to police.

6. Your Mobile will be traced within next 24 hrs via a complex system of GPRS and internet.

7. You will find where your hand set is being operated even in case your no is being changed.

PASS ON THIS VERY IMP MESSAGE TO ALL YOUR FRIENDS AND RELATIVES.
................................................................................................
If u lose your mobile, send an e-mail to cop@vsnl.net with the following info.

Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.:

"காமராஜர் ஒரு சகாப்தம்"


எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? ஏது 100 ஆண்டு பேசும் சாதனை?

காமராசரின் ஆட்சி காலம்:

ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக்
காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப்
பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச்
சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார்
காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக
ஆட்சியில் அமர்வது.
ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம்
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய
6000 பள்ளிகளைச் சிலமாதங்களில்
ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும்
திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.
அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள்
கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும்
மாணவர்கள் பட்டினியாக இருக்கக்
கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம்
தீட்டி நிறைவேற்றினார்!
நிதிப் பற்றாக்குறை, அரசாங்க
கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப்
பிச்சைக் கார மாநிலமாக
முன்னிருத்தினார்.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ்
அதே பிச்சைக்காரத்
தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில்
வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக்
கொண்டுவந்து நிறுத்தினார்!
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித்
தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட்
தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை
இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில்
இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கினார்.
மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள் தோழர்களே...!
காமராஜ் ஆட்சி புரிந்தது 9
ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில
விடுபட்டுள்ளன)
அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த
இந்தச் சாதனைகளில்...
இந்தியாவிலெயே தொழில்வளர்ச்சியில்
இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர்
செய்தது சாதனையா..?
இல்லை
"இலவச"த்தின் பேரில் நம்மைப்
பிச்சைக்காரர்களாக
மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின்
செய்கை சாதனையா..?


Thanks to: ரிலாக்ஸ் ப்ளீஸ்

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.


Thanks To :

மின் கட்டணம் விவரம் கவனிக்க வேண்டியவை ........

வீடு வீடாக சென்று மின் அளவை கணக்கீடு எடுக்கும் மின் ஊழியர்களிடம் ஒரு அட்டை எப்போதும் இருக்கும். மின் கட்ட‍ண மீட்ட‍ரில் உள்ள‍ அளவுகளை குறித்துக்கொண்டும், அந்த அளவுகளுக் கான மின் கட்ட‍ணம் எவ்வ‍ளவு என்பதனை அவரிடம் உள்ள‍ ஒரு அந்த அட்டையை பார்த்து கணக்கிட்டு, நாம் கொடுக்கும் மின் அட்டையில் மின் அளவு மற்றும் கட்ட‍ வேண்டிய தொகையினை குறித்துக் கொ டுப்பார்கள். அவர்கள் குறிப்பிடும் தொகை யை நாமும் அப்ப‍டியே கொண்டு போய் மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தி விட்டு வருகிறோமே! அதை ப்பற்றிய அடிப் படை அறிவு நமக்கு இருந்ததுண்டா ? ஒரு இணையத்தில் நான் கண்ட பதிவு மின் அட்டையை பற்றிய சில குறிப்புக் களை அனைவருக்கும் புரியும் வகையில் கொடுத்துள்ளார். நீங்கள் படித்து பயனுறுங்கள்.
வீட்டு இணைப்புகளுக்கானது:-
முதல் நிலை:-
.
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
.
நிலைக்கட்டணம் இல்லை.
.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டு க்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக எந்த கட்டணமும் இல்லை.)

.
இரண்டாம் நிலை:-
.
1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்து விடுவீர்கள். நீங்கள் 110 யூனிட் உப யோகி த்தால் உங்களுக்கான தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆக மொத்தம் ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)
.
மூன்றாம் நிலை:-
.
1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.

நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகி க்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம் ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)
.
நான்காம் நிலை:-
.
1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
.
500 க்கு மேல் ரூபாய் 5.75.
.
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00

.
(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10 யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+ கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆக மொத்தம் ரூ.1898.00 நீங்கள் செலுத்த வேண்டும்)
.
கடைகளுக்கானது:-
.
1-100 யூனிட் வரை ரூபாய் 4.30.
.
100 யூனிட்டுக்கு மேல உபயோகித்தால் 1 யூனிட் விலை ரூபாய் 7.00 மட்டுமே கூடுதலாக 5 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் மற்றும் 1 கிலோ வாட்டிறகு 120 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


Thanks To:

Google Chrome 35 Keyboard Shortcuts

Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல வித வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் நாம் அறிந்திருக்க வேண்டிய 35 - ஐ Keyboard Shortcuts பார்ப்போம்.

Ctrl+N புதிய விண்டோ ஓபன் செய்ய
Ctrl+T புதிய Tab ஓபன் செய்ய
Ctrl+O குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome - இல் ஓபன் செய்ய.
Ctrl+Shift+T கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய.
Ctrl+1 முதல் Ctrl+8 குறிப்பிட்ட Tab க்கு செல்ல
Ctrl+9 கடைசி Tab க்கு செல்ல
Ctrl+Tab or Ctrl+PgDown அடுத்த Tab க்கு செல்ல
Ctrl+Shift+Tab or Ctrl+PgUp முந்தைய Tab க்கு செல்ல
Alt+F4 or Ctrl + Shift + W தற்போதைய விண்டோவை Close செய்ய.
Ctrl+W or Ctrl+F4 தற்போதைய tab அல்லது pop-up ஐ Close செய்ய.
Backspace முந்தைய பக்கங்களுக்கு செல்ல
Shift+Backspace Next Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்)
Alt+Home Home Page க்கு செல்ல
Alt+F or Alt+E or F10 Chrome Crunch மெனுவை ஓபன் செய்ய
Ctrl+Shift+B Bookmarks Bar – ஐ தெரிய/மறைய வைக்க
Ctrl+H History page – ஐ ஓபன் செய்ய
Ctrl+J Downloads page – ஐ ஓபன் செய்ய
Shift+Esc Task Manager – ஐ ஓபன் செய்ய
F6 or Shift+F6 URL, Bookmarks Bar, Downloads Bar போன்றவற்றை Highlight செய்ய. [எது இருக்கிறதோ அது தெரிவு ஆகும்]
Ctrl+Shift+J Developer Tools – ஐ ஓபன் செய்ய
Ctrl+Shift+Delete Clear Browsing Data – வை ஓபன் செய்ய
F1 Help Center – ஐ ஓபன் செய்ய
Ctrl+L or Alt+D URL ஐ Highlight செய்ய
Ctrl+P தற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய
Ctrl+S தற்போதைய பக்கத்தை சேவ் செய்ய
F5 or Ctrl+R Refresh செய்ய
Esc Loading – ஐ நிறுத்த
Ctrl+F find bar – ஐ ஓபன் செய்ய
Ctrl+U தற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க
Ctrl+D குறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய
Ctrl+Shift+D ஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய
F11 Full-screen க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப
Space bar பக்கத்தை Scroll down செய்ய
Home பக்கத்தின் Top க்கு செல்ல
End பக்கத்தின் Bottom க்கு செல்ல


Thanks to: https://www.facebook.com/arindhukolvom?ref=stream

 
Copyright 2013 KADAYANALLUR-ONLINE | Developed by KADAYANALLUR-ONLINE
Developed by ADMIN
Supported by KADAYANALLURTIMES